

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் பட்ஜெட்டுக்குத் தான் முதலிடம் என்பதை இப்போது மைக்ரோசாப்டும் புரிந்துகொண்டிருக்கிறது.
இதன் வெளிப்பாடுதான் புதிய லூமியா 430 போன். இரட்டை சிம் வசதி கொண்ட இந்த போன் இந்தியாவில் ரூ.5,299 எனும் விலையில் அறிமுகமாகி இருக்கிறது.
மைக்ரோசாப்டின் விலை குறைந்த ஸ்மார்ட் போன் இதுதான். 4 அங்குல டிஸ்பிளே, ஸ்னேப்டிராகன் 200 பிரசாஸர், 1 ஜிபி ரேம், 8 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த விண்டோஸ் 8.1 போன். விரைவில் வெளியாக உள்ள விண்டோஸ் 10-ஐயும் இந்த போனில் அப்டேட் செய்துகொள்ளலாமாம்.
அதே போல மைக்ரோசாப்டின் ஆபீஸ், ஸ்கைப் மற்றும் ஒன் டிரைவ் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கிறது. 1,500 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கிறது. 2 மெகா பிக்சல் பின்பக்க காமிரா மற்றும் 0.3 மெகா பிக்சல் முன்பக்க காமிராவும் இருக்கிறது. நல்ல ஆரஞ்சு மற்றும் கறுப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. 3ஜி, வை-பை மற்றும் ப்ளுடூத் 4.0 ஆகிய அம்சங்களும் இருக்கின்றன.
இது பட்ஜெட் போன் என்றால் எல்ஜி நிறுவனம் தனது வளைந்த வடிவமைப்பைக் கொண்ட ஜி பிலக்ஸ் வரிசையில் ஜி பிலெக்ஸ் 2 ஸ்மார்ட் போனை ரூ.54,990 விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. முந்தைய மாதிரியைவிட இதன் திரை அமைப்பு கூடுதல் துல்லியமும் நேர்த்தியும் கொண்டிருக்கிறது