ப்ளு-கனெக்ட்

ப்ளு-கனெக்ட்
Updated on
1 min read

இந்திய நிறுவனமான ஜிப்ரானிக்ஸ் ப்ளு-கனெக்ட் எனும் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒலிபெருக்கிகள், கார் ஸ்டீரியோ, ஹெட்போன்கள் போன்ற ப்ளூடூத் அல்லாத சாதனத்தை ப்ளூடூத் வசதியுள்ளதாக மாற்றுகிறது.

ப்ளூ கனெக்ட் பல்வகை பயன்பாடு கொண்ட சாதனம். இதன் மூலம் பல சாதனங்களுக்கு ப்ளூடூத் அம்சத்தைச் சேர்க்க முடியும்.

இதைப் பயன்படுத்துவதும் தகவமைப்பதும் சுலபம் என்று ஜீப்ரானிக்ஸ் தெரிவிக்கிறது. ப்ளூ-கனெக்ட் ஒலி அவுட்புட்டுக்காக 3.5mm ஆடியோ ஜேக்குடன் வருகிறது. இதற்குள் ஒரு லியான் (li-ion) பேட்டரியும் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in