Last Updated : 26 May, 2014 02:47 PM

 

Published : 26 May 2014 02:47 PM
Last Updated : 26 May 2014 02:47 PM

லேப்டாப்பாகச் செயல்படும் டேப்லெட்

இளைஞர்களைக் குறிவைத்துச் சந்தையில் புதிது புதிதாக கேட்ஜெட்கள் வந்தவண்ணமே உள்ளன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் ப்ரோ 3 என்னும் புதிய டேப்லெட்டை உருவாக்கியுள்ளது. இது டேப்லெட்டாகவும் பயன்படும்; லேப்டாப்பாகவும் பயன்படும். வீடியோ பார்க்க விரும்புகிறீர்களா சர்பேஸ் ப்ரோ 3 டேப்லெட்டாக மாறிவிடும். ஏதேனும் சீரியஸான வேலைகளைப் பார்க்க வேண்டுமா, கவலையே வேண்டாம் அதுவே லேப்டாப்பாக வடிவம் எடுத்துவிடும்.

இந்த டேப்லெட்டை இயக்குவது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 ப்ரோ மென்பொருள். இதில் தொடுதிரை உள்ளது. அதே சமயம் தனியே கீபோர்டு, டச்பேடை இணைத்தும் நீங்கள் பணிபுரிய முடியும். எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவுக்கு உதவும் யூஎஸ்பி போர்ட் ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு வசதியுமே வேறு எந்த டேப்லெட்களிலும் பார்க்க முடியாதவை.

சர்பேஸ் ப்ரோ 3 நான்காம் தலைமுறை இண்டல் கோர் புராஸஸரால் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 46,700லிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 14 ஆயிரம் வரை உள்ளது. தேவையான வசதிகளுக்கேற்ப விலை அமைகிறது. இதன் சேமிப்பு திறன் 62 ஜிபியிலிருந்து 512 ஜிபி வரை உள்ளது. இதன் நிறம் சில்வர். ஒன்பது மணி நேரம் பிரவுஸிங் செய்தாலும் இதன் பேட்டரி தாங்கும். டால்பி சவுண்ட் சிஸ்டம் கொண்ட ஸ்பீக்கர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. எச்டி தொழில்நுட்பத்தில் இயங்கும் 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. சர்பேஸ் ப்ரோ 3 டேப்லெட் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த டேப்லெட் கம் லேப்டாப்புக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதுவரை இல்லாத அளவு விரைவாகவும் மெல்லியதாகவும் இது இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை நீங்கள் படுக்கறையில் பயன்படுத்துவது போலவே நெருக்கடியான பேருந்திலோ ரயிலிலோ பயன்படுத்த முடியும். கையாள்வது மிகவும் எளிது. சர்பேஸ் ப்ரோ 3-ன் டிஸ்ப்ளே மூலை விட்டத்தில் சுமார் 12 அங்குலம். இது மிகப் பெரிய அளவிலான திரையாக இருக்கும். இதனுடன் வரும் எழுதுகோல் (stylus) ஒரு பேனா போலவே வசீகரத்துடன் உள்ளது. என்னவொன்று இதை இயக்க ரீசார்ஜபிள் பேட்டரி இல்லை. திரையில் இந்த எழுதுகோலால் எழுதும்போது ஏற்படும் அழுத்தம் அதிகமாக இருந்தால் திரையே அதைச் சொல்லிவிடும். அதற்கு ஏற்ப செட்டிங்கைச் சரிசெய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x