

இணையத்தில் புதிதாக ஒரு வார இதழ் அறிமுகமாகியுள்ளது. ஏ.ஐ. பற்றிய செய்திகளைச் சுடச்சுடத் தருவதற்காகவே இமெயில் வார இதழாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ-யின் விரிவாக்கம் செயற்கை அறிவைக் குறிக்கும் ஆர்டிஃபீஷியல் இண்டலிஜென்ஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏகப்பட்ட இயந்திரங்களும், தானியங்கி கார்களும் இந்தப் பிரிவில் வருகின்றன.
எதிர்காலத்தில் ஏ.ஐ. தாறுமாறாக முன்னேற்றம் காண இருப்பதாகப் பலரும் நம்புகின்றனர்.
இத்தகைய நம்பிக்கை கொண்டவர்கள் இத்துறைச் செய்திகளைத் தவறவிடாமல் தெரிந்துகொள்வதற்கான வழிதான் ஏ.ஐ. வீக்லி இணையதளம்: >http://aiweekly.co/