ரோலர் கோஸ்டர் மேம்பாலம்

ரோலர் கோஸ்டர் மேம்பாலம்
Updated on
1 min read

ஜப்பானின் மாட்சு மற்றும் சகாய்மினாட்டு என்கிற நகரங்களை இணைக்கும் எஷிமா ஓஷி மேம்பாலம் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

1.7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம் உலகின் மூன்றாவது பெரிய மேம்பாலமாகும். 45 டிகிரி சாய்வாக அமைந்துள்ள இந்த பாலத்தின் உயரம் 144 அடி.

இதற்குக் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏற்ப உயரமாக கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் ஏறும்போது ரோலர் கோஸ்டரில் செல்லும் உணர்வு ஏற்படுகிறதாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in