

தொழில்நுட்பச் செய்திகளைப் பின்தொடர்வதில் ஆர்வம் இருக்கிறதா? இந்தச் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறதா?
இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஆல் டெக் நியூஸ் (http://alltechnews.co/) இணையதளம் உருவாகி இருக்கிறது. இந்தத் தளத்தில் தொழில்நுட்ப உலகின் அனைத்து முக்கியச் செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தொழில்நுட்பச் செய்திகளைச் சிறப்பாக அளிக்கும் டிஜிட்டல் டிரெண்ட்ஸ், கீக்.காம் (geek.com) ஆகிய தளங்களில் தொடங்கி ஹேக்கர் நியூஸ், பிபிசி உள்ளிட்ட 41 தளங்களில் இருந்து செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது. செய்திகளுக்கான தேடல் வசதியும் இருக்கிறது.
தளத்தின் மையப் பகுதியில் செய்திகள் வரிசையாக இடம்பெற வலது பக்கத்தில் மூல தளங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.
ஹைடெக் ஆர்வலர்கள் புக்மார்க் செய்துகொள்ள வேண்டிய தளம் இது. >http://alltechnews.co/