

ஆண்ட்ராய்டு போனில், ஒவ்வொரு முறை பேசி முடித்ததும் அழைப்புகளைத் துண்டிக்க, ஸ்கிரீனுக்கு வந்து, கீழ்ப்பகுதியில் உள்ள போன் சின்னத்தில் ஒரு தட்டு தட்ட வேண்டும். இதற்கு மாறாக அழைப்புகளைத் துண்டிக்க வேறு சுலப வழி இல்லையா என ஏக்கமாக உள்ளதா? வழி இருக்கிறது. அதுவும் உங்கள் ஆண்ட்ராய்டு போனிலேயே இருக்கிறது. பவர் பட்டன் மூலம் அழைப்புகளைத் துண்டிக்கலாம்.
இதைப் பயன்படுத்த உங்கள் ஆண்ட்ராய்டு போன் செட்டிங்கிற்குச் சென்று அதில் அக்சஸிபிலிட்டி அம்சத்தைத் தேர்வு செய்து அதில் உள்ள பவர் பட்டன் மூலம் அழைப்புகளை முடிவுக்குக் கொண்டு வரும் வசதியை டிக் செய்து, சேவ் செய்துகொண்டால் போதும். இனி அடுத்த முறை போனில் பேசிய பிறகு திரையைப் பார்க்காமாலே பவர் பட்டனைத் தட்டிவிட்டு வேறு வேலை பார்க்கலாம்.
இந்த வசதிக்கு இன்னும் தெளிவான விளக்கம் தேவை என்றால்: