நிக்கான் செல்ஃபி ஸ்டிக்

நிக்கான் செல்ஃபி ஸ்டிக்
Updated on
1 min read

ஸ்மார்ட் போனோ, காமிராவோ செல்ஃபிகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் இல்லையா? காமிரா தயாரிப்பு நிறுவனமான நிக்கானும் இதைப் புரிந்துவைத்திருக்கிறது. அதனால்தான் புதிதாக செல்ஃபி ஸ்டிக்கை அறிமுகம் செய்திருக்கிறது.

என் - எம்.பி001 எனும் பெயரில் நிக்கான் அறிமுகம் செய்துள்ள இந்த செல்ஃபி ஸ்டிக் 7.28 அங்குலத்தில் இருந்து 28.54 அங்குலமாக நீளக்கூடியது. எல்லா கூல்பிக்ஸ் காமிரா மாதிரிகளுக்கும் இது ஏற்றதாக இருக்கும். மென்மையான கைப்பிடி மற்றும் கை மணிக்கட்டில் மாட்டிக்கொள்ளக்கூடிய வளையம் ஆகிய அம்சங்கள் உள்ளன.

ஆனால் செல்ஃபி ஸ்டிக்குகளில் இருப்பது போல வயர்லெஸ் முறையில் படமெடுக்கும் வசதி இதில் இல்லை. ஸ்டிக்கை நீட்டிப் படமெடுப்பதற்கு முன், முதலில் காமிராவில் படமெடுக்கும் நேரத்தை செட் செய்தாக வேண்டும்.

ஒரு பக்கம் அருங்காட்சியகங்கள் போன்றவற்றில் செல்ஃபி ஸ்டிக்குகளுக்குத் தடைவிதித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் இது போல் புதிய செல்ஃபி ஸ்டிக்குகள் அறிமுகமாகிவருகின்றன!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in