ரசிகர்கள் வைத்த பெயர்

ரசிகர்கள் வைத்த பெயர்
Updated on
1 min read

யூக்நைட், யூனிகான், யூத், யூனிட்டி, யுப்போரியா...! இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? எல்லாமே மைக்ரோமேக்சின் துணை நிறுவனமான ‘யு’வின் புதிய போனுக்காக ரசிகர்கள் பரிந்துரைத்த பெயர்கள்தான். இளைஞர்களைக் கவரும் வகையில் மைக்ரோமேக்ஸ் புதிய நிறுவனம் மூலம் யு யுரேகா போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இரண்டாவது போனுக்கான திட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் இந்த திட்டத்திற்கு பிராஜக்ட் சீஸர் எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் தொழில்நுட்ப தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போனுக்கான பெயர் சூட்டும் பொறுப்பைப் பயனாளிகளிடமே ஒப்படைக்க முடிவு செய்து கிரவுட் சோர்சிங் முறையில் பெயர்கள் கோரப்பட்டன.

இப்படிக் குவிந்த பெயர்களில் அதிக வாக்குகள் பெற்ற பெயர்களின் பட்டியல் தான் மேலே பார்த்தது. எல்லாம் சரி இதில் எந்த பெயர் தேர்வானது தெரியுமா? யுப்போரியா (Yuphoria). ஆம் அந்தப் பெயரில்தான் அடுத்த யு போன் வெளியாக உள்ளது.

இது 64 பிட் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி நினைவுத்திறன் ஆகியவற்றுடன் ஆண்ட்ராய்ட் லாலிபாப் அடிப்படையிலான சிஎம் ஓஎஸ் 12 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in