

இந்தியச் சந்தையில் தனது இருப்பை வலுவாக்கிக் கொள்ளும் அடுத்த கட்டமாக ஜியோமி நிறுவனம் தி மொபைல் ஸ்டோருடன் கைகோத்துள்ளது. இந்த மையங்களின் மூலம் எம்.ஐ 4 மற்றும் ரெட்மி 4 ஜி ஆகிய சாதனங்களை விற்பனை செய்ய உள்ளது.
இந்த மையங்களில் ஜியோமி ஜோன் இருப்பதுடன் விற்பனைக்குப் பிந்தைய சேவையையும் இவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோமி இணையம் மூலமாக இந்தியச் சந்தையில் காலூன்றியது. அது இனியும் தொடரும் என அறிவித்துள்ளது.
ஜியோமி இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே நிறுவனத்திடம் இருந்து புதிய பட்ஜெட் போன் ஏப்ரல் 8-ம் தேதி அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியச் சந்தையில் எப்போது அறிமுகமாகும் எனத் தெரியாவிட்டாலும் இதன் விலை ரூ.6,000 அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.