நெஸ்ட் அலாரம்

நெஸ்ட் அலாரம்
Updated on
1 min read

குளிர்பிரதேச நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது நேரத்தை கணக்கிடுவது. சூரியன் குறைவான நேரமே உதிப்பதால் எப்போது நாள் தொடங்குகிறது முடிகிறது என்பது குழப்பமாகவே இருக்கும்.

அந்த சிக்கலை தீர்க்கிறது இந்த சிறிய கருவி. வெளியில் எந்த வெப்ப நிலை நிலவினாலும் நேரத்திற்கு ஏற்ப அறைக்குள் வெப்ப நிலையை இந்த கருவி கொண்டு வந்துவிடுமாம்.

ஒளிரும் ஸ்பிரே

இரவில் சைக்கிளில் செல்லும்போது இந்த ஸ்பிரே அடித்துக் கொண்டால் ஒளி பிரதிபலிப்பு ஏற்படுத்தும். தேவை முடிந்ததும் இந்த தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் வண்ணம் கலைந்து விடும். வால்வோ நிறுவனம் இதை அறிமுகப்படுத்தி உள்ளது.

டிரைவர் வியூ முகப்பு விளக்குகள்

சாலைகளில் புதிய தொழில் நுட்பமாக புழக்கத்துக்கு வர உள்ளது டிரைவர் வியூ ஹெட் லைட்டுகள். வாக்ஸ்ஹால், ஓபல் நிறுவனங்கள் இதற்கு முயற்சி செய்து வருகின்றன.

வாகனத்தின் முகப்பு விளக்கான ஏஎப்எல் விளக்கு முறையை இதன் மூலம் மாற்ற முயற்சி செய்து வருகிறது இந்த நிறுவனங்கள். வழக்கமாக முகப்பு விளக்குகளின் ஒளி கற்றையாக விழும் என்றால், இந்த புதிய முறையில் முகப்பு விளக்குகளின் ஒளி டிரைவர் கண் பார்வையிலிருந்து விழுவது போலவே இருக்கும்.

அதாவது வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளி அனைத்து திசைகளிலும் விழும்படி இருக்கும். இதன் மூலம் டிரைவர்கள் இரவு நேரத்திலும் தெளிவாக முன் பக்கத்தை பார்க்க முடியும் என்கிறது இந்த நிறுவனங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in