இணையப் பயன்பாட்டின் சதவீதம்

இணையப் பயன்பாட்டின் சதவீதம்
Updated on
1 min read

இந்தியாவின் ஸ்மார்ட் போன் பயன்பாடு 14 சதவீதம் என இணையப் பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னோடியாக இருக்கும் பியூ ரிசர்ச் செண்டர் (Pew Research Center) தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகளில் இணையப் பயன்பாடு தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. வளரும் நாடுகளில் உள்ளவர்களில் பலரும் இணையம் கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எனினும் நெறிமுறைகள் மீது தாக்கம் ஏற்படுத்துவதாகவும் சொல்கிறது. பொதுவாக இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அது நல்ல தாக்கம் ஏற்படுத்துவதாகவே கருதுகிறார்கள் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியப் பயனாளிகளில் 65 சதவீதம் பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், 55 சதவீதம் பேர் வேலைக்கு விண்ணப்பிக்க இணையத்தைப் பயன்படுத்துவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

வளரும் நாடான சிலியில் இணையப் பயன்பாடு அதிகபட்சமாக 76 சதவீதம் இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த நாடுகளில் கணினியைப் பயன்படுத்தும் வசதியும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 32 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சராசரியாக 44 சதவீத மக்கள் ஆன்லைனில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in