

சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோமியை தொடர்ந்து அதன் போட்டியாளரான மெய்சூவும் (Meizu) இந்தியா வருகிறது. மெய்சு சீனாவின் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ஏற்கனவே ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி வரவேற்பையும் பெற்றிருக்கும் நிலையில் மெய்சூவும் விரைவில் இந்தியா வரவிருக்கிறது. இதன் பேஸ்புக் பக்கத்தில் தாஜ்மகால் பின்னணியில் இந்திய ரசிகர்களுக்கு வணக்கம் எனத் தெரிவிக்கப்பட்டு, நாங்கள் வருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மெய்சூவின் எந்த மாதிரி அறிமுகமாகும், அதன் விலை என்ன போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. அநேகமாக இது மெய்சூ எம் 1 நோட்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சாதனம் ஜனவரியில் அறிமுகமானது.
இந்திய ரசிகர்களுக்காகப் பரிசுப் போட்டி ஒன்றையும் மெய்சூ இந்தப் பக்கத்தில் அறிவித்து அவர்களின் மெய்சூ அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டிருந்தது.
மெய்சூ பேஸ்புக் பக்கம்: >https://www.facebook.com/meizu?fref=photo