

சாம்சங்கின் சமீபத்திய போனான கேலக்ஸி எஸ் 6 மற்றும் எட்ஜ் ஆகியவை அடுத்த மாதம் விற்பனைக்கு வரும், இதற்கான முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரியவருகிறது.
உலோக பிரேம் கொண்டிருப்பதும், 30 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும் திறன் கொண்டிருப்பதும் கேலக்ஸி எஸ் 6யின் சிறப்பம்சங்கள்.
5.1 இஞ்ச் திரை மற்றும் அதிக ஒளியை அனுமதிக்கும் விதத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட காமிரா இருப்பதால் புகைப்படத்தின் தரம் சிறப்பாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
கைரேகை சென்சார் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது.