லாவாவின் புதிய அறிமுகம்

லாவாவின் புதிய அறிமுகம்
Updated on
1 min read

லாவா தனது பியல் சீரிசில் இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐரிஸ் பியல் 10, ஐரிஸ் பியல் 25 (Iris Fuel 25 )ஆகிய இந்த போன்கள் மேம்பட்ட பேட்டரி ஆற்றலைக் கொண்டிருப்பதாக லாவா தெரிவிக்கிறது. ஐரிஸ் பியல் 10 மாதிரி 4.5 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கிறது. நல்ல ரிசல்யூஷன் கொண்டது. ஐந்து மெகாபிக்சல் பின் பக்க காமிரா, இரண்டு மெகாபிக்சல் முன் பக்க காமிரா கொண்டிருக்கிறது. இதன் பின் பக்கத்தில் செல்ஃபிக்கான தனி பட்டன் இருகிறதாம். ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4. வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப்பாக மேம்படுத்திக்கொள்ளலாம். 3ஜி வசதி கொண்டது.

ஐரிஸ் பியல் 25 மாதிரி அங்குல டிஸ்பிளே கொண்டது. காமிரா சிப் சென்சார் கொண்ட பின் பக்க காமிரா மற்றும் முன் பக்க காமிரா உள்ளது. இதன் பேட்டரி 15 நிமிட தொடர் பேசும் ஆற்றல் கொண்டதாக லாவா சொல்கிறது. 4 ஜிபி சேமிப்புத்திறன் கொண்டது. ரூ.6,541 மற்றும் ரூ.5,666 விலையில் கிடைக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in