

கார் விமானம் என இரண்டு வகையிலும் இயங்குகிறது ஏரோமொபைல் என்கிற இந்த வாகனம். ஸ்லோவோக்கியா நாட்டைச் சேர்ந்தவர் இதை உருவாக்கியிருக்கிறார். சாலையில் கார் போல ஓட்டிச் செல்லலாம். தேவையான நேரத்தில் சிறிய ரக விமானம்போல இயக்கிக் கொள்ளலாம்.
ரோபோ எறும்புகள்
மிகச் சிறிய அளவில் பயோனிக் எறும்புகளை தயாரித்து வருகின்றனர் ஜெர்மன் விஞ்ஞானிகள். எறும்புகள் கூட்டாக உழைப்பதைபோல இந்த ரோபோ எறும்புகளும் கூட்டாக உழைக்கின்றன.
அதற்கேற்ப ஒவ்வொரு ரோபோ எறும்புகளும் சென்சார் மூலம் ஒருங்கிணைகின்றன. எதிர்காலத்தில் ஒரு வேலையைக் கூட்டாக செய்யக்கூடிய வகையில் இந்த வகை ரோபோக்களை பயன்படுத்த முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கீ போர்டு இல்லாத லேப்டாப்
கீ போர்டே இல்லாமல் முழுவதும் டச் ஸ்கீரின் லேப்டாப் வர உள்ளது. தேவைக்கேற்ப டச் கீ போர்ட் மூலம் லேப்டாப்பாக பயன்படுத்தலாம். புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கிண்டில் போல பயன்படுத்தலாம்.
செய்தித்தாள் படிக்க வேண்டும் என்றால் செய்தித்தாளின் முழுமையான பக்கத்தையும் இரண்டு பக்க ஸ்கீரினிலும் பார்க்க முடியும். பில் என்கிற டிசைன் நிறுவனம் இந்த வகை கான்செப்ட் லேப்டாப்பை வடிவமைத்துள்ளது.