

ஸ்மார்ட் வாட்சால் என்ன பயன் என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் ஆண்ட்ராய்டு வியரில் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போனை மறந்து வைத்துவிட்டால் ஸ்மார்ட் வாட்ச் மூலம் தேடலாம்.
ஸ்மார்ட் வாட்சில், “எங்கே என் போன் தேடு” எனக் கட்டளையிட்டால், போனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு முழு அளவில் ஒலிக்கும். அதை வைத்து போன் இருப்பிடத்தை அறியலாம்.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் சேவை மூலம் இது இயங்குகிறது. குரல் வழிச் சேவையாகவும் இதை இயக்கலாம். அல்லது ஸ்டார்ட் மெனுவில், போனை கண்டுபிடிக்கும் வசதி மூலமும் இயக்கலாம்.
ஆண்ட்ராய்டு வியர் ஸ்மார்ட் வாட்ச்களில் இந்த வசதி தானாக அப்டேட் ஆகிவிடும். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாக உள்ள நிலையில் இது போன்ற வசதிகள் ஆண்ட்ராய்டு வியரில் அறிமுகமாகிவருகிறது.
எல்லாம் சரி, ஆப்பிள் வாட்ச் இந்தியாவுக்கு ஜூன் அல்லது ஜூலையில் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதன் விலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா! சுமார் 30,000 ரூபாயாக இருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது.