இரண்டு போர்டுகள் கொண்ட ஜீப்ரானிக்ஸின் புதிய பவர் பேங்க்

இரண்டு போர்டுகள் கொண்ட ஜீப்ரானிக்ஸின் புதிய பவர் பேங்க்
Updated on
1 min read

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட் பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை அதன் பேட்டரி சக்தி. எவ்வளவு விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைலாக இருந்தாலும் அதன் பேட்டரி காலம் குறைவாகவே இருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க பல்வேறு பவர் பேங்குகள் தற்போது சந்தையில் விற்பனையில் உள்ளன. ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் 10000mAh அளவு பேட்டரி சக்தி கொண்ட ஜீப் பிஜி 10000 என்ற பவர் பேங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு யூஎஸ்பி போர்டுகளுடன் இருக்கும் இந்த பவர் பேங்க் ஒரு எல்ஈடி டார்ச் லைட்டுடன் வருகிறது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களை சார்ஜ் செய்ய முடியும். எடை குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்க் ஒரு வருட வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in