

இந்தியாவின் சொகுசான ரயில் பயணத்தை வழங்குகிறது மஹாராஜா எக்ஸ்பிரஸ். சொகுசு மட்டுமல்ல இந்தியாவில் அதிக கட்டணம் கொண்ட ரயிலும் இதுதான்.
குறைந்தபட்ச கட்டணமே ரூ. 2 லட்சம். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை இந்த ரயிலில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஜெய்ப்பூர், ஆக்ரா, உதய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர் வாரணாசி, லக்னோ என மன்னர்கள் ஆட்சி செய்த பகுதிகள், கோட்டைகள் என இந்த சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் உள்ள அறைகளும் ராஜா காலத்து அலங்காரங்களோடு சொகுசாக இருக்கும். அதுபோல பணியாளர்கள், உணவு, சேவை என எல்லாமே ராஜ உபசாரமாக இருக்கும்.
இந்த ரயில் பயணமும் ராஜ மரியாதையை நமக்கு பெற்றுதரும்.