

ஸ்மார்ட் போன் உலகில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒவ்வொரு விற்பனை உத்தி உண்டு. பிளேஷ் சேல் ஜியோமியின் வழி என்றால் ஒன் பிளஸ் ஒன் , அழைப்பு மூலமான விற்பனை உத்தியைப் பின்பற்றி வருகிறது.
இந்த முறையை சற்றுத் தளர்த்தி வாரம் ஒரு முறை அழைப்பில்லாமல் போன்களை விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது.
இந்த முறையை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய ஒன் பிளஸ் ஒன் திட்டமிட்டிருப்பதாக அதன் கண்டிரி மேனேஜர் விகாஸ் அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஆனால் இதற்குக் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் என்கிறார். இது தவிர இந்தியாவில் உள்ள ஒன் பிளஸ் ஒன் பயனாளிகளுக்கான ஆக்ஸிஜன் ஓஎஸ் அப்டேட் அடுத்த மாத வாக்கில் சாத்தியமாகலாம்.
ஏறக்குறைய இதே காலத்தில் ஒன் பிளஸ் ஒன் 2 போனும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.