நவீன குடைகள்

நவீன குடைகள்
Updated on
1 min read

மனிதன் குடையை கண்டுபிடித்து 3000 வருடங்கள் இருக்கலாம் என்கிறது வரலாறு. ஒவ்வொரு காலகட்டத்திலும் குடையின் வடிவங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் இதன் தொழில்நுட்பம் மட்டும் மாறிவிடவில்லை.

குடையை மழையில் பிடித்துக் கொண்டு சென்றால் மேல்பாகத்தில் மழைநீர்பட்டு வடிவதற்கு ஏற்ப அரைவட்ட கூடு போல இருக்கும். ஆனால் இதற்கும் வந்துவிட்டது நவீன தொழில்நுட்பம்.

இந்த நவீன குடையில் மேல்பாகம் துணியோ, அல்லது வேறு மழை தடுப்பு சாதனங்களோ கிடையாது. கிட்டத்தட்ட ஒரு பெரிய சைஸ் டார்ச் லைட் போல நீண்டு இருக்கும் கருவி இது.

மழை பெய்கிற போது இந்த கருவியை தூக்கிப் பிடித்துக் கொண்டு சென்றால் போதும். இதன் மேல்பாகத்திலிருந்து அழுத்தமான காற்று வெளிப்படும்.

அந்த காற்று மழைய எதிர்த்து வீசுவதால் மேலிருந்து விழும் மழை நீர் பக்கவாட்டில் விசிறியடிக்கப்படும். இந்த கருவியின் அடிப்பகுதியில் இதற்கான பேட்டரிகள் உள்ளன. 30 நிமிடங்கள் வரை இந்த பேட்டரி வேலை செய்யும்.

ஆனால் வெயிலுக்கு இதமாக பிடித்துக் கொண்டு போக முடியுமா தெரியவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த குடைகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது இதை வடிவமைத்துள்ள நிறுவனம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in