

ஸ்மார்ட் போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜியோமி இந்த ஆண்டு எட்டு முதல் 10 கோடி ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இதன் சி.இ.ஓ லே ஜுன் (Lei Jun ) கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டின் விற்பனை இலக்கான நான்கு கோடியை மிஞ்சி கடந்த ஆண்டு 6.1 கோடி போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு அதைக் கிட்டத்தட்ட இருமடங்காக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் விற்பனையை அதிகரித்தாலும் விலை விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் ஜியோமி ரெட்மி 2 அல்லது எம்.ஐபேடை அறிமுகம் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஜியோமி வளர்ச்சித் திட்டத்தில் இந்தியச் சந்தை முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் இங்கு தனது இருப்பை மேலும் வலுவாக்கி கொள்ள நிறுவனம் விரும்புகிறது.