

தேர்தல் சீசன் என்பதால் ஏற்கெனவே மோடி ரன், ஆம் ஆத்மி ரன்னர், ஆங்க்ரி அன்னா உள்ளிட்ட ஆண்ட்ராய்ட் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன. அந்த வரிசையில் இப்போது மேரா பி.எம் கான் மற்றும் ஷேம் ஷுஸ் என இரண்டு விளையாட்டுகள் பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன. மோடி மற்றும் ராகுல் வடிவ பொம்மைகள் மோதிக்கொள்வது தான் மேரா பி.எம் கான் விளையாட்டின் ஸ்பெஷல். ஷேம் ஷுஸ் விளையாட்டுப்படி ஒரு ரூமில் காங்கிரஸ் கொடிகளுக்கு மத்தியில் மன்மோகன் போன்ற உருவ பொம்மை நிற்கும், அதன் மீது ஷூக்கள் வீசப்பட அந்த பொம்மையை அதில் படமால் நகர்த்த வேண்டும். ஷூக்களில் படமால் விலக விலக அதற்கேற்ப ஸ்கோர் கிடைக்கும்