

அவசரத்துக்கு பிரிண்ட் எடுக்க அலைந்து கொண்டிருக்க தேவையில்லை. பிரிண்ட் எடுக்கவும் கையடக்க தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.
இதனை யுஎஸ்பி கேபிள் மூலம் இணைத்து பிரிண்ட் எடுக்கலாம். இந்த கருவியில் உள்ள எல்இடி மானிட்டரில் பிரிண்ட் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
ஹைட்ரஜன் டிராம்
ஹைட்ரஜனில் இயங்கும் டிராமை அறிமுகம் செய்ய உள்ளது சீனா. இதை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 3 நிமிடங்களில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்பிக் கொண்டு மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் 70 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வகையில் இந்த ஹைட்ரஜன் டிராம் இருக்குமாம்.
டிரான் பைக்
பைக் பிரியர்களுக்கு ஹாலிவுட்டின் டிரான் படத்தில் பயன்படுத்திய நவீன பைக் மீது மோகம் இருக்கும். அது எதிர்கால பைக் வடிவமைப்பில் உருவானது. தற்போது இந்த பைக் ஏலத்துக்கு வருகிறது. முற்றிலும் கணினி மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய டிஜிட்டக் பைல் இது. விலை ரூ.24 லட்சம்தான்.