

மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ டர்போ ஸ்மார்ட் போன் மாதிரியை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. பிளிப்கார்ட் மூலம் இதை முன்பதிவு முறையில் வாங்கலாம். இந்த போனின் சிறப்பம் அதன் 3900mAh பேட்டரி.
இது அளவில் பெரிய பேட்டரி என்பதுடன் ஒரு நாள் முழுவதும் சார்ஜ் நீடித்து மறுநாளும் சில மணிநேரம் தாக்குப்பிடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக 15 நிமிடங்கள் ரீசார்ஜ் செய்தால் 7 மணி நேரம் நீடிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிகிறது.
21 மெகா பிக்சல் காமிரா, 2 மெகா பிக்சல் முன்பக்க காமிராவுடன் 5.2 அங்குல எச்டி டிஸ்பிளே பெற்றிருக்கிறது. இதன் பேலிஸ்டிக் நைலான் வடிவமைப்பும் விஷேச அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர் ஒட்டிக்கொள்ளாமல் தடுக்கும் தன்மையும் பெற்றிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்குகிறது.எல்லாம் சரி இதன் விலை? ரூ.41,999.