

ஒரு வண்ணத்தில் இருக்கும் உடை ஒளி பிரதிபலிப்பு முறையில் வண்ணங்கள் மாற்றம் பெறுகிறது. இந்த ஆடையின் வண்ணங்கள் சூழ்நிலையின் ஒளிகளை உள்வாங்கி பிரதிபலிக்கிறது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நியூரோ விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டுபிடித்துள்ளார்.
காலையில் நீல வண்ணத்தில் இருக்கும் உடை மதியத்தில் வேறு ஒரு வண்ணத்துக்கும், இரவுக்கு வேறு வண்ணத்துக்கும் மாறிக் கொள்ளும்.
ஒரே உடையை அணிந்தாலும், நேரத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் என்பதால் அடிக்கடி வேறு உடைகள் மாற்ற வேண்டிய தேவை இல்லை.
ஜன்னல் இல்லாத விமானம்
ஜன்னல்கள் இல்லாத விமானத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது. இந்த விமானத்தின் உட்புற மேற்கூரை எல்இடி தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வெளிப்புறம் கேமரா இருக்கும்.
இந்த கேமரா படம் பிடிக்கும் காட்சிகள் விமானத்தின் உட்புற மேற்கூரையில் தெரியும். இந்த தொழில்நுட்பம் மூலம் பயணிகளுக்கு கண்ணாடி விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வு கிடைக்கும்.