

கம்ப்யூட்டரில் தொடர்ச்சியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு டீ குடித்தால் ரிலாக்ஸாக இருக்கும் என யோசிப்போம். ஆனால் அதற்கு கொஞ்சம்கூட நேரம் ஒதுக்க முடியவில்லை என்பவர்களுக்காகவே ஆப்பிள் நிறுவனம் ஐ-கப் மூலம் தீர்வு சொல்ல வருகிறது.
இந்த ஐ-கப் என்கிற கான்செப்ட் ஏற்கனவே அறிவித்ததுதான் என்றாலும் அதற்கான ஆராய்ச்சி வேலைகளில் உள்ளது. கம்ப்யூட்டரிலிருந்து யுஎஸ்பி டிவைஸ் மூலம் இது இயங்கும்.
வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே காபி டீ தயார் செய்து கொள்ளலாம். குளிர்ச்சி என்றால் ஆப்பிள் சின்னம் நீலமாகவும் சூடாக இருந்தால் சிவப்பாகவும், மிதமான சூட்டில் ஆரஞ்சு வண்ணமாகவும் ஒளிரும்.
மடக்கு போன்
பிலிப் டைப் போன்கள் நாம் பயன்படுத்தியதுதான். ஆனால் முழுமையான ஸ்கீரின் கிடைக்காது. இந்த கான்செப்ட் போனை அப்படியே மடக்கி வைத்துக் கொள்ளலாம்.
நியான் மெட்டீரியல்களைக் கொண்டுள்ளதால் போனை மடக்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஐ-போன் 2020
2020-ம் ஆண்டில் ஐ-போன் எப்படி இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிளாக் ஹோல் போன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய மவுஸ் போன்ற கருவி இது. இதன் நடுவில் இருக்கும் சின்ன குமிழியிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றை காற்றில் விஷூவலை உருவாக்குகிறது. அந்தரத்தில் தெரியும் இந்த விஷூவல் மூலம் ஐ-போனில் மேற்கொள்ளும் அனைத்து செயல்களையும் மேற்கொள்ளலாம்.
இந்த கையடக்க கருவியை கம்ப்யூட்டர், மற்றும் லேப்டாப் போன்ற கருவிகளுடனும் இணைத்துக் கொள்ளலாம். தற்போது கான்செப்ட் என்கிற வகையில் இதன் வடிவமைப்பு வந்துள்ளது.