கையடக்க சோலார் சார்ஜர்

கையடக்க சோலார் சார்ஜர்
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சார்ஜ் தீர்ந்துவிட்டால் அவசரத்திற்கு பவர்பேங்க் பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்கும் மின்சாரத்தை நம்பி இருக்க வேண்டும். அதற்கு தீர்வாக இந்த கையடக்க சோலார் சார்ஜர் உதவி செய்யும். இந்த கையடக்க கருவியின் பேனல் மூலம் எந்த இடத்திலும் சார்ஜர் ஏற்றலாம்.

சோலார் சாலைகள்

நெதர்லாந்து நாட்டில் சோலார் சாலைகளுக்கான முயற்சி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 100 மீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது, சைக்கிள் மற்றும் டூவீலர்கள் செல்வதற்கான பாதையாக இது உள்ளது. இந்த சாலையிலிருந்து பெறப்படும் மின்சாரம் சாலையின் அடிப்பகுதியில் உள்ள பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது.

பைக்குகள் சென்றாலும் சேதமடையாத வகையில் தடிமனான பேனல்கள் மூலம் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்கள் பரிசோதிக்கப்பட்டு சாதகமான நிலைமை இருக்கும்பட்சத்தில் நெதர்லாந்தின் 20 சதவீத சாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளது நெதர்லாந்து அரசு.

கம்பி இணைப்பு இல்லாத லிப்ட்

இரண்டு அடுக்கு வீடு கட்டுவதென்றாலும் லிப்ட் வசதி தேவையாக இருக்கிறது. படிக்கட்டுகள் ஏறி இறங்குவதைவிட லிப்ட் என்பது எளிமையாக தூக்கிக் கொண்டு போகும். ஆனால் அதை பராமரிப்பது எளிமையானதல்ல. லிப்ட் நடு வழியில் நின்று அவஸ்தைப்படுவதும் நடக்கும்.

இதற்கெல்லாம் தீர்வு கம்பி இணைப்பு இல்லாத லிப்ட்கள். காந்த விசையுடன் இது இயங்குகிறது. கட்டிடத்தின் உச்சி வரை ஒரே நேராக செல்ல வேண்டும் என்பதில்லை. இடது வலது என லிப்ட் பாதைகள் அமைத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஒரு லிப்ட்தான் இயக்க வேண்டும் என்பதில்லை. ஒரே பாதையில் 2, 3 லிப்ட்களையும் இதன் மூலம் இயக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in