4 ஜி-ல் சாம்சங் கவனம்

4 ஜி-ல் சாம்சங் கவனம்
Updated on
1 min read

வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் சந்தையான இந்தியாவில் தனது இருப்பை வலுவாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் சாம்சங் நிறுவனம் 4 ஜி ஸ்மார்ட் போன்களை விரிவாக்கியுள்ளது.

கேலக்ஸி கிராண்ட் பிரைம் 4ஜி, கேலக்ஸி கோர் பிரைம் 4ஜி மற்றும் சாம்சங் ஜே1 4 ஜி ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன.

இவை தவிர கேலக்ஸி ஏ 7 ஏற்கனவே ரூ. 30,499 விலையில் அறிமுகமாகியுள்ளது. சாம்சங்கின் ஒல்லியான போனாக இது கருதப்படுகிறது.

மற்ற போன்கள் மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 9.990 முதல் தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

புதிய 4 ஜி மாதிரிகள் மற்ற ஆசிய நாடுகளிலும் அறிமுகமாகின்றன. மைக்ரோமேக்ஸ் மற்றும் ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் அறிமுகங்களால் ஏற்பட்டுள்ள போட்டியைச் சமாளிக்க இந்த மாதிரிகளை சாம்சங் கொண்டுவருவதாக ஸ்மார்ட் போன் சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே சாம்சங் பட்ஜெட் டேப்லெட்டான கேலெக்ஸி கிராண்ட் மேக்சையையும் இந்திய சந்தையில் ஓசைப்படாமல் கொண்டு வந்துள்ளது.

ஸ்னேப்டீல் மின்வணிக தளத்தில் இது பட்டியலிடப்பட்டிருந்தாலும் விலை என்ன, எப்போது விற்பனை போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in