Published : 03 Feb 2015 12:44 PM
Last Updated : 03 Feb 2015 12:44 PM

கிரெடிட் கார்டு அளவிலான போன்!

எதிர்கால பிலிப்ஸ் போன்

எதிர்கால ஸ்மார்ட்போன் வகைகள்தான் எத்தனை வகை. பிலிப்ஸ் நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்போன் வடிவமைப்பை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. மிக மெலிதாக கிரெடிட் கார்டு அளவில் இருக்கிறது இந்த போன். இதை வழக்கமான போன் பயன்படுத்துவது போல பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப கைகளில் சுற்றிக்கொள்ளவும் செய்யலாம்.

விளையாடும் ரோபோ

கம்ப்யூட்டர் மூலமான விளையாட்டுகளில் விளையாடுபவருக்கு எதிராக கம்யூட்டரோடு விளையாடலாம். அதேபோல ஒரு விளையாட்டு வீரருக்கு எதிரே நின்று விளையாட இன்னொருவர் விளையாட வழி கண்டுபிடித்து விட்டார்கள். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் மறு முனையில் ரோபோ விளையாடும்.

இந்த பக்கம் இருப்பவர் பந்தை அடித்ததும் அந்த பந்து எவ்வளவு வேகத்தில், எந்த திசையில் வருகிறது என்று அறிந்து எதிர் முனையில் இருக்கும் ரோபோ பந்தைத் திருப்பி அடிக்கும். பந்து எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதற்கு ஏற்ப நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரோ குரோமிக் லென்ஸ்கள்

பல வகைகளிலும் சன் கிளாஸ் கிடைக்கிறது என்றாலும் தேவைக்கு ஏற்ப அதன் கருமைத் தன்மையை சரி செய்துகொள்ள முடியாது.

வெயில் படுகிறபோது தானாகவே கறுப்பு நிறந்துக்கு மாறிக்கொள்ளும் ஆட்டோ பவர் கண்ணாடிகள் இருக்கிறது என்றாலும் இதையும் நாம் கட்டுப்படுத்த முடியாது. அந்தக் குறையையும் விஞ்ஞானிகள் போக்கியுள்ளனர். எலக்ட்ரோ குரோமிக் பாலிமர் தொழில்நுட்பத்தில் புதிய லென்ஸ்களை கண்டுபிடித்துள்ளனர்.

இது அல்ட்ரா வயலெட் கதிர்களிலும் செயல்படும். மேலும் இந்த லென்ஸ்களை பயன்படுத்துபவர்களே தேவைக்கேற்ப நிறத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்கேற்ப கண்ணாடிக்கு பக்கவாட்டில் சிறிய பட்டன் இருக்கும். அதன் மூலம் இதை இயக்கலாம். பேட்டரியில் இது செயல்படுகிறது.

மேலும் பவர் கிளாஸ் போலவும், ஸ்டைல் கிளாஸ் போலவும் அந்த கண்ணாடியை பயன்படுத்த முடியும். இரவு நேரத்துக்கு ஏற்பவும் இந்த கண்ணாடி லென்ஸ்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

விரைவில் இந்த வகை கண்ணாடிகள் விற்பனைக்கு வரவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x