

ஸ்மார்ட் போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஜியோமி 64 ஜிபி கொண்ட எம்.ஐ 4 ஸ்மார்ட் போன் மூலம் இந்தியச் சந்தையில் காலூன்றியுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் எம்.ஐ 4 ஸ்மார்ட் போனை (16ஜிபி) அறிமுகம் செய்தது.
அப்போதே 64 ஜிபி திறன் கொண்ட மாதிரி விரைவில் அறிமுகமாகும் எனக் கூறியிருந்தது. இந்நிலையில் ஜியோமி தனது முகநூல் பக்கத்தில் 24-ம் தேதி 64 ஜிபி மாதிரி இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் இதன் விலை ரூ.23,999 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோமியின் எம்.ஐ ஸ்மார்ட் போன்கள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் ஒன் பிளஸ் ஒன் போனுடன் போட்டியிட வேண்டும் என ஸ்மார்ட் போன் சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஒன் பிளஸ் ஒன் 64 ஜிபி ஸ்மார்ட் போன் ரூ.21,999 விலையில் அறிமுகமாகியிருக்கிறது.