

லெனொவோ நிறுவனம் தனது சிஸ்லே எஸ் 90 ஸ்மார்ட் போனை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆப்பிளின் ஐபோன் 6 போலவே இருக்கும் இந்த ஸ்மார்ட் போனை லெனோவோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்தப் போனின் விலை ரூ.19,990. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வளைந்த பக்கவாட்டை இவை கொண்டிருக்கின்றன.
ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் செயல்படுகிறது.
செல்பி வசதிக்கான முன்பக்கக் கேமிரா உள்ளிட்ட இரட்டை கேமிரா மற்றும் வீடியோ கான்பெரன்ஸ் வசதியையும் கொண்டுள்ளது.