

உலகக் கோப்பை ஜுரம் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயர் இணையத்தில் அதிகம் தேடப்படுவதாக உள்ளது. அவரது பேஸ்புக் பக்கத்திலும் லைக்குகளின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தொட்டிருக்கிறது. இப்போது கோலி ரசிகர்களுக்கு கோலி மொபைல் கேம்கள் ஆடி மகிழும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
ஆம், கோலியை மையமாகக் கொண்டு மொபைல் கேம்கள் உருவாக்கப்பட உள்ளன. நசார டெக்னாலஜிஸ் (Nazara Technologies) நிறுவனம் இந்த கேம்களை உருவாக்குகிறது. மொபைல் தவிர இணையத்திலும் டிடீஎச்சிலும் இந்த கேம்களை விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் பிரபல நட்சத்திரங்களுக்காக மொபைல் கேம்கள் உருவாக்கப்பட்டுப் பிரபலமாக இருக்கின்றன. இப்போது கோலிக்கும் இந்தக் கவுரவம் கிடைத்துள்ளது.