விர்ச்சுவல் கணினி, டிஜிட்டல் பாய்: தொழில்நுட்பத்தில் புதிய வருகை

விர்ச்சுவல் கணினி, டிஜிட்டல் பாய்: தொழில்நுட்பத்தில் புதிய வருகை
Updated on
1 min read

நானோ சிப்

கம்ப்யூட்டரில் சிலிகான் சிப்-களுக்குப் பதிலாக விஞ்ஞானிகள் கார்பன் நானோ டியூப்களால் ஆன சிப்களைத் தயாரித்துள்ளனர். மின்னணு தொலைநோக்கி மூலமாக மட்டுமே இதன் சர்க்யூட்டுகளைக் காண முடியும். இதை முதற்கட்டமாக மருத்துவத் துறைக்கு பயன்படுத்த உள்ளனர்.

டிஜிட்டல் பாய்

2020-ம் ஆண்டில் பயன்படுத்த சாத்தியமுள்ள டிஜிட்டல் படுக்கை விரிப்பை ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை இந்த விரிப்பைத் தாண்டி போனால் உடனே பெற்றோருக்கு சிக்னல் கொடுக்கும். இதை பாய்போல சுருட்டி ஓரமாகவும் வைத்துவிடலாம்.

விர்ச்சுவல் கணினி

டெல் நிறுவனம் அடுத்த தலைமுறை கணினி வடிவமைப்பில் உள்ளது. கீ போர்டும் கிடையாது, மானிட்டரும் கிடையாது. சின்னதாக ஒரு மோடம் மட்டுமே இருக்கிறது. இந்த மோடத்திலிருந்து விர்ச்சுவலாக மானிட்டரும், கீபோர்டும் ஆன் செய்து கொண்டு வேலை செய்ய வேண்டியதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in