Last Updated : 26 Feb, 2015 09:47 AM

 

Published : 26 Feb 2015 09:47 AM
Last Updated : 26 Feb 2015 09:47 AM

நாளைய உலகம்: மைக்ரோசாஃப்டின் புதிய சேவை

மைக்ரோசாஃப்டின் புதிய சேவை

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விரைவில் புதிய மெசஞ்சர் சேவையை தொடங்கவுள்ளது. ‘பீப்புள் சென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இதை ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பதிவேற்றினால் அவருடைய போன் புக்கில் உள்ள தொடர்புகள், ஃபேஸ்புக்கில் உள்ள தொடர்புகள், அந்த சாதனத்திலுள்ள மேப்பிங் அப்ளிகேஷன்கள் ஆகியவற்றில் இருந்து முன் அனுமதியோடு தகவல்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

இதன் மூலம் நண்பர்கள், குடும்பத்தார்கள் என வேண்டியவர்களை மட்டுமே கொண்ட தொடர்பு வட்டத்தை உருவாக்க முடியும்.

ஆப்பிளின் புதிய முயற்சி

ஆப்பிள் நிறுவனம் தனது தகவல் மையங் களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட் டுள்ளது. இதன் முதல் முயற்சியாக ஐரோப்பா வில் உள்ள தனது தகவல் மையங்களை புதுப் பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

“இதன்மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பையும், இயற்கைக்கு பாதுகாப்பையும் அளிக்க முடியும்” என்கிறார் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் கூக்.

குழந்தைகளுக்காக யூட்யூப்

கூகிளின் ஆன்லைன் வீடியோதளமான யூட்யூப் குழந்தைகளுக்காக புதிய முயற் சியை எடுத்துள்ளது. இதற்காக ‘யூட்யூப் ஃபார் கிட்ஸ்’ என்னும் புதிய அப்ளிகேஷன் கூகிள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை பதிவேற்றிக்கொண்டால் குழந்தைகளுக்கான பயனுள்ள வீடியோக்களை கண்டு மகிழலாம். அறிவியல், கூட்டல், கழித்தல் கணக்குகள், மொழிசார்ந்த கல்வி, பாடல்கள் என மூன்று வயது குழந்தைகளுக்கும் புரியக்கூடிய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

நினைவுப் பக்கம்

ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இறந்துவிட் டால் அவரது கணக்கை அழிப் பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். சம்பந்தப் பட்ட நபர் இறந்தது தெரியாமல் பலரும் அந்த கணக்குக்கு நட்பு அழைப்புகளை விடக்கூடும். இந்நிலையில் அந்த கணக்கை இறந்தவரின் நினைவு பக்கமாக மாற்ற முடியும்.

ஒரு பயனர் இறந்துவிட்டால் அவரது கணக்கை நினைவு கணக்காக மாற்ற சம்பந்தப்பட்ட நபரின் குடும்ப உறவினரோ அல்லது நெருக்கமான நண்பர்களோ, ஃபேஸ்புக்கில் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் இறந்த வர் கணக்கு நினைவு பக்கமாக மாறிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x