Last Updated : 20 Feb, 2015 02:59 PM

 

Published : 20 Feb 2015 02:59 PM
Last Updated : 20 Feb 2015 02:59 PM

பட்ஜெட் ஸ்மார்ட் போன்

இண்டெக்ஸ் நிறுவனம் இந்தியச் சந்தையில் மேலும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருக்கிறது. அக்வா ஸ்டார் எல் எனும் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.6,990.

இது ஆண்ட்ராடு லாலிபாப் 5.0 இயங்கு தளத்துடன் அறிமுகமாகிறது. இந்தியாவில் அறிமுகமாகும் முதல் லாலிபாப் போன் இது எனலாம்.

இந்த போன் மோட்டோ இ, ரெட்மி ஆகியவற்றுக்குச் சரியான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இரட்டை சிம் கார்டு வசதியுடன், முன்பக்க, பின்பக்க காமிராக்களுடன் வருகிறது. 3ஜி, ப்ளுடூத், மைக்ரோ யூஎஸ்பி வசதி கொண்டிருக்கிறது. 5 இன்ச் டிஸ்பிளே கொண்டது.

சமீபத்தில்தான் அக்வா டிசையரை நிறுவனம் அறிமுகம் செய்தது. இப்போது அக்வா ஸ்டார் வந்துள்ளது. மின்வணிகத் தளமான ஸ்னேப்டீல் மூலம் விற்கப்பட உள்ளது.

இது மட்டும் அல்ல, நிறுவனம் அக்வா ஸ்டார்- II போனையும் ரூ.5999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது ஆண்ட்ராய்ட் கிட்கேட்டில் செயல்படுகிறது.

8 மெகாபிக்சல் காமிரா மற்றும் 5 மெகாபிக்சல் காமிராக்கள் கொண்டது. நான்கு வித வண்ணங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x