ஜியோமி லேப்டாப்?

ஜியோமி லேப்டாப்?
Updated on
1 min read

ஸ்மார்ட் போன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜியோமி புதிய சுற்று நிதியைப் பெற்று சந்தை மதிப்பையும் 45 பில்லியன் டாலராக அதிகரித்துக் கொண்டுள்ளது. எம்.ஐ ஸ்மார்ட் போன்களில் புதிய மேம்பாடு எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜியோமி புத்தாண்டில் புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்யப் போகிறதாம். கிஸ்மோசீனா தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இது ஜியோமியின் முதல் லேப்டாப்பாக இருக்கும். புகைப்படத்துடன் இந்த லேப்டாப் அமசங்கள் பற்றிய விவரங்களையும் அந்த தளம் வெளியிட்டுள்ளது. இது இண்டெல் சிப், 15 இன்ச் டிஸ்பிலே, மற்றும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்ஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 481 டாலர் வரை இருக்கலாம். அதில் ஹைலைட் என்னவென்றால் இந்த லேப்டாப் ஆப்பிளின் மேக்புக் போலவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஸ்மார்ட் போன் வடிவமைப்பில் ஆப்பிளின் வடிவமைப்பை நகலெடுப்பதாகக் குற்றச்சாட்டு கூறப்பட்டும் அதற்கு ஜியோமி பதிலடி கொடுத்தும் வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in