

ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு வர இன்னும் சில வாரங்களாவது காத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே ஆப்பிள் வாட்சின் வடிவமைப்பு பற்றியும் சிறப்பம்சங்கள் பற்றியும் அதில் இடம் பெறக்கூடிய பிரத்யேக செயலிகள் பற்றியுமான விவரங்களைத் தொழில்நுட்பத் தளங்கள் வெளியிட்டு வருகின்றன. இவை எல்லாம் போதாது என்று செய்திகளுக்காக அறியப்படும் பிரபலமான பைப்ஸ் நிறுவனம் ஆப்பிள் வாட்சின் டிஜிட்டல் வடிவை உருவாக்கித் தனது இணையதளத்தில் இடம்பெற வைத்துள்ளது.
இந்தத் தளத்தில் அதன் டெமோ வடிவைப் பார்க்கலாம். ஆப்பிள் வாட்சில் செயலிகள் எப்படிக் காட்சி அளிக்கும், அதை எப்படி இயக்கலாம் போன்ற அம்சங்களை இந்தக் காட்சி விளக்கத்தில் பார்க்கலாம். இதில் உள்ள ஒவ்வொரு பகுதியாக கிளிக் செய்து செயல்பாட்டை வெள்ளோட்டம் பார்க்கலாம். அப்படியே பைப்ஸ் செய்தி செயலி ஆப்பிள் வாட்சில் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம். ஆப்பிள் வாட்ச்சில் அதன் கிரவுன் பகுதியைத் திருகினாலே அதை இயக்கலாம் என்று சொல்லப்படுகிறது. டெமோ வாட்ச் என்பது புதுமையான யோசனைதான்.
ஆப்பிளை வாட்ச் டெமோவைப் பார்க்க: >http://www.demoapplewatch.com/