

கண்ணாடி படகு
படகுப் பிரியர்கள் விரும்பும் வண்ணம் முழுவதும் கண்ணாடியாலான படகுகள் வந்துள்ளன. இந்த படகில் பயணிக்கும்போது கடலில் நீந்திக் கொண்டிருப்பது போலவே அனுபவத்தை தரும். விலை ரூ.15 லட்சம்.
கோடக் ஸ்மார்ட் போன்
கோடக் நிறுவனம் ஸ்மார்ட்போன் துறையில் இறங்கியுள்ளது. இந்த போனில் சிறப்பு என்னவென்றால் கோட்டக் கேமராவில் படம் பிடிப்பதுபோல ஸூம் வசதி உள்ளது. முன்பக்கம் அதன் வழக்கமான கேமரா தோற்றமும், பின்பகுதியில் ஸ்மார்ட்போன் திரை இயங்குவது போலவும் இருக்கும்.
ஓமேகா பட்டர்பிளை
உலகப் புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான ஒமேகா பிரஸ்டீஜ் பட்டர்பிளை என்கிற வரிசையில் கைக் கடிகாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சீனக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதன் விலை ரூ. 2 லட்சம் முதல் 19 லட்சம்.