

கேட்ஜெட் பிரியர்களுக்கு 2015 ம் ஆண்டு மணக்க மணக்க இருக்கப்போவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வரும் ஆண்டில் வாசனையை அனுப்பிவைக்கக் கூடிய ஸ்மார்ட் போன்கள் பிரபலமாகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. போனில் மெசேஜ் அனுப்புவது போல வாசனையை அனுப்ப முடியும் என்பது ஆச்சர்யமான போக்குதான். ஏற்கனவே விஞ்ஞானிகள் பாரிசில் இருந்து நியூயார்க்குக்கு ஓபோன் டுவோ எனும் சாதனம் மூலம் வாசனையை அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சாதனத்தில் ஓஸ்னாப் எனும் செயலி மூலம் வாசனையைத் தேர்வுசெய்து ஓநோட்டாக அனுப்பினால் மறுமுனையில் உள்ள சாதனத்தில் அந்த வாசனையை உருவாக்கிக்கொள்ள முடியுமாம். இந்த நுட்பம் மூலம் வழக்கமான மெஸேஜ்களை மணக்கும் செய்திகளாக அனுப்பி வைக்கலாம் என்கின்றனர். வியப்பாக இருக்கிறது இல்லையா? இதைவிட வியப்பு, 2015-ல் இந்த நுட்பம் பரவலாக புழக்கத்துக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நெஸ்டா அமைப்பு 2015-ம் ஆண்டில் பிரபலமாக விளங்க கூடியதாக வெளியிட்டுள்ள நுட்பங்கள் மற்றும் போக்குகள் பட்டியலில் இந்த நுட்பமும் இடம்பெற்றுள்ளது.
முழுப் பட்டியலைக் காண: >http://www.nesta.org.uk/news/2015-predictions