

ஸ்மார்ட் போன்களுக்கான ஓபரா மினி பிரவுசர் கடந்த மாதம்தான் 50 மில்லியன் பயனாளிகள் எனும் மைல்கல்லை எட்டியது. அதற்குள் அதன் தலைமைச் செயல் அதிகாரி லார்ஸ் பாயிலேசென் (Lars Boilesen) ராய்டர்சுக்கு அளித்த பேட்டியில், விரைவில் 100 மில்லியன் பயனாளிகளை இந்தியாவில் எட்டுவதே இலக்கு எனக் கூறியுள்ளார்.
இந்தியச் சந்தை தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் இங்கு ஸ்மார்ட் போன் செயலிகளில் 3-வது இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். உலகில் வேகமாக வளரும் 5 ஆண்ட்ராய்டு போன் சந்தைகளை எடுத்துக்கொண்டால் அங்கெல்லாம் முன்னணிச் செயலிகளில் முதல் 5 இடத்தில் ஓபரா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரேசில், இந்தோனேசியா, ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதனிடையே ஓபரா, செயலிகளுக்கான ஆப் ஸ்டோரின் நீட்டிப்பாக சந்தா செலுத்திப் பயன்படுத்தும் சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. கட்டணச் செயலிகளைத் தனித்தனியே வாங்குவதற்குப் பதில் ஒருமுறை சந்தா செலுத்திவிட்டு விரும்பிய பிரிமியம் செயலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இசை மற்றும் வீடியோக்களில் வெற்றிகரமாகச் செயல்படும் இந்த பிரவுசர், செயலிகளுக்கும் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். >http://www.operasoftware.com/products/subscription-mobile-store