

ஸ்மார்ட் வாட்ச்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விரைவிலேயே ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்த உள்ளது. 1.5 அங்குலம் திரை கொண்ட இந்த கடிகாரத்தின் பேட்டரிகள் 2 நாட்கள் வரை நீடிக்கும். இந்த கடிகாரத்தை அணிந்திருப்பவரின் இதயதுடிப்பை அளவிடும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.
விலை உயர்ந்த பரிசு
உலகின் விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களைப் பட்டியலிட்டுள்ளது மோஸ்ட் எஸ்பென்ஸிவ் லிஸ்ட் என்கிற இனணயதளம். இதில் இந்த வருடத்தின் விலை உயர்ந்த பரிசுப் பொருளாக லிகா கேமரா இடம்பிடித்துள்ளது. ரோலக்ஸ் கடிகாரம், ஜாய் பர்ஃப்யூம் என பட்டியலிட்டுள்ளது.
காபி விற்கும் ரோபோ
ஜப்பானின் சாஃப்ட்பேங்க் நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோவை உருவாக்கியுள்ளது. காபி விற்பனை மையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரோபோவின் மார்பில் உள்ள தொடு திரை கணினியில் தேவையானதை பதிவு செய்தால் காபி உங்கள் கைகளுக்கு வரும்.
வலிமையான லேப் டாப்!
கம்ப்யூட்ர், செல்போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளுக்கு அதிகபட்ச உத்தரவாதம் யாரும் தர முடியாது. இருந்தாலும் நிறுவனங்கள் அதிகபட்சம் ஓராண்டு உத்தரவாதம் அளிக்கின்றன. கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டெல் நிறுவனம் மிகவும் வலிமையான லேப் டாப்பை உருவாக்கியுள்ளது. எத்தகைய சூழலிலும் செயல்படக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தொடர் மழை, பாலைவனப் புழுதி போன்ற சூழலிலும் இது பாதிக்கப்படாமல் செயல்படும். நீர் புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல தூசி உள்ளிட்டவற்றாலும் பாதிக்கப்படாது.
எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றுவோர் மற்றும் சுரங்கங்களில் பணி புரிவோருக்கு ஏற்றதாக இது இருக்குமாம். ராணுவத்தினருக்கு மிகவும் ஏற்றது. இதன் வலிமையை தாங்கும் திறனை சோதிக்க இதன் மீது ஒருவர் ஏறி நின்று விளம்பரப்படுத்தியுள்ளார். இதன் விலை ரூ.. 2.39 லட்சம் முதல்.
60 கிலோ எடையைத் தாங்கும் என்பதால் இதன் மீது 60 கிலோ எடைக்கல்லை தூக்கிப் போட்டு இதன் தாங்கும் திறனை சோதித்துப் பார்கக் கூடாது. கடினமான சூழலிலும் இது செயலாற்றும் என்பதை இந்நிறுவனம் நிரூ.பித்துள்ளது