

2014-ம் ஆண்டின் சிறந்த செயலிகள் (ஆப்ஸ்) பட்டியலை கூகுள் பிளே ஸ்டார் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்த மாதிரி ஆண்ட்ராய்டு பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 64 செயலிகள் பட்டியலில் உள்ளன. இசைப் பிரியர்களுக்கான ஷாசம், ஐடியூனின் ரேடியோ, இணைய டாக்சி சேவையான யுபேர், மற்றும் ரகசிய செய்தி சேவையான சீக்ரெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்விப்ட்கீ கீபோர்ட், லாக்கெட், டைம்ஹாப், பஸ்ஃப்பீட், ஒன்ஃபுட்பால் ஆகிய செயலிகளும் இருக்கின்றன.
பெரும்பாலும் இலவச செயலிகள்தான்.எனினும் சில கட்டண செயலிகளும் உள்ளன. கடந்த ஆண்டும் கூகுள் இதே போல் பட்டியலை வெளியிட்டது.
உங்கள் அபிமான செயலிகள் இந்தப் பட்டியலில் இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளவும். அல்லது பட்டியலிலிருந்து உங்களுக்கான செயலியையும் தேர்வுசெய்து கொள்ளலாம்: