Last Updated : 20 Dec, 2014 04:03 PM

 

Published : 20 Dec 2014 04:03 PM
Last Updated : 20 Dec 2014 04:03 PM

கையிலே தொடுதிரை

ஸ்மார்ட் போனில் உள்ள தொடுதிரை வசதி எல்லாம் ஒன்றுமே இல்லை. பிரான்சைச் சேர்ந்த சிக்ரெட் எனும் நிறுவனம் உங்கள் கைகளேயே தொடுதிரையாக மாற்றுவதற்கான கருத்தாக்கத்தை முன் வைத்துப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் இதற்காகப் புதிய ஹைடெக் பிரேஸ்லெட்டை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. “உங்கள் சருமத்தை புதிய டேப்லெட்டாக மாற்றுங்கள்” எனும் கோஷத்தை முன்வைத்துள்ள இந்நிறுவனம் இந்த நவீன் பிரேஸ்லெட் செயல்படும் விதத்தை விவரிக்கும் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக 40 லட்சம் முறைக்கு மேல் பார்த்து வியக்கப்பட்டுள்ளது.

மெமரி கார்டு, சிப், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், அக்ஸலோமீட்டர் ,வை-பை மற்றும் புளுடூத் கொண்டதாக இந்தச் சாதனம் உருவாக்கப்பட உள்ளது. இதற்குத் துணையாக ஒரு செயலியும் உண்டாம். மெயில் படிப்பது, போன் பேசுவது,நோட்டிபிகேஷன் பெறுவது என எல்லாமே இந்தக் கை தொடு திரையில் சாத்தியம் என நிறுவனம் கூறுகிறது. இந்த பிரேஸ்லெட் மற்றும் அதற்குத் துணையான செயலியை உருவாக்க இணையம் மூலம் நிறுவனம் நிதி கோரியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் முன்னோட்ட வடிவை உருவாக்கும் முயற்சியில் இருப்பதால் முன்பதிவு விற்பனை என ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பலரைக் கவர்ந்திருந்தாலும், பொருள் முன்னோட்ட வடிவில் இல்லாத நிலையில் நிதி கோருவதும் பலத்த விமர்சனத்துக்கு இலக்காகி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: >http://www.cicret.com/wordpress/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x