குட்டி கார்

குட்டி கார்
Updated on
1 min read

நீளமான ரயில் பாதை

சீனா - ஸ்பெயின் நாடுகளை இணைக்கும் விதமாக 13,000 கிலோ மீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்துக்காக போடப்பட்டுள்ள உலகின் நீளமான ரயில்பாதை இதுதான். ஒரே நேரத்தில் 40 கண்டெய்னர்களை ஏற்ற முடியும்.

ஸ்மார்ட் பேனா!

எழுதுவதற்கு மட்டுமல்ல, உரையாடலைப் பதிவு செய்யவும் உதவும் லைவ்ஸ்கிரைப் எகோ ஸ்மார்ட் பென். 800 மணி நேரம் வரையான உரையாடலை இதில் பதிவு செய்ய முடியும்.

குட்டி கார்

ஹாங்காய் நகரைச் சேந்த ஷூஷையூன் உலகின் மிகச்சிறிய காரை வடிவமைத்துள்ளார். 77 சிசி திறன் கொண்ட இந்த குட்டி கார் 24 அங்குல நீளமும், 14 அங்குல அகலமும் கொண்டது. உயரம் 16 அங்குலம். ஒருவர் உட்கார்ந்து செல்லும் வகையிலான இந்த காரை வீட்டிலேயே வடிவமைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in