

எந்நேரமும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பது போர் அடித்துவிட்டது என்பவர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்க வந்துவிட்டது வொர்க் ஹப்கள். லேப்டாப், டேட்டா கார்டு சகிதம் இந்த ஹப்களுக்கு வந்துவிட்டால் போதும், மழையை ரசித்துக் கொண்டு, சூடாக காபி குடித்துக் கொண்டு வேலைபார்க்கலாம். அல்லது பசுமையான மலையை பார்த்துக் கொண்டோ, பீன் பேக்கில் சாய்ந்துகொண்டோ கூலாக வேலை பார்க்கலாம். இப்படியான வொர்க் ஹப்கள் டெல்லி , பெங்களூரு மும்பை போன்ற நகரங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் மற்ற நகரங்களுக்கும் பரவலாம். தீயாக வேலை பார்த்தாலும் ஹாயாக பார்க்கலாம்.