நோக்கியாவின் மறு அவதாரம்

நோக்கியாவின் மறு அவதாரம்
Updated on
1 min read

மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மொபைல் பிரிவை விற்றுவிட்டு நோக்கியா ஒதுங்கியிருக்கலாம். ஆனால் கேட்ஜெட் துறையில் நோக்கியா படலம் முடிந்துவிட்டதாகத் தோன்றவில்லை. சமீபத்தில்தான் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு டேப்லெட் ( நோக்கியா என்1) அறிமுகம் பற்றிய செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் ஸ்மார்ட் போன் பற்றிய தகவல் புகைப்படத்துடன் கசிந்திருக்கிறது.

டெக்பெப் இணையதளம் இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. நோக்கியா சி1 எனும் பெயரில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான திட்டம் இருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது. 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் இண்டெல் பிரசாஸர் கொண்டிருக்கும் என்றெல்லாம் வதந்திகள் இருக்கின்றன. நோக்கியா இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை. மைக்ரோசாப்டுடனான ஒப்பந்தப்படி நோக்கியா ஸ்மார்ட் போனில் 2016 வரை நோக்கியா பிராண்டைப் பயன்படுத்த முடியாது.

சாதாரண செல்போன்களில் பத்தாண்டுகளுக்குத் தனது பிராண்டைப் பயன்படுத்த முடியாது. ஆனால் டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்த கட்டுப்பாடு இல்லை. அதனால் தான் ஆண்ட்ராய்டு டேப்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் சீனாவில் இருந்து இவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா ஸ்மார்ட் போன் பற்றிய வதந்திகள் உண்மையாக இருந்தாலும் கூட 2016- ல் ஒப்பந்தம் முடியும் வரை இது சந்தைக்கு வர வாய்ப்பில்லை. நோக்கியா தனது பெயர் மற்றும் தொழில்நுட்பத்தை நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in