பாதுகாப்பான செயலிகள்
பிளாக்போன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மற்ற ஸ்மார்ட் போன்கள் போல இல்லாமல் பயனாளிகளின் அந்தரங்கத் தகவல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் போனாக பிளாக்போன் முன்வைக்கப்படுகிறது. பிரைவசி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிளாக்போன், இப்போது செயலிகளுக்கான பிரத்யேக ஆப் ஸ்டோரை நிறுவ இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் அறிமுகமாக உள்ள இந்த ஸ்டோரில் ,பயனாளிகளை உளவு பார்க்காத மற்றும் அவர்களின் தகவல்களைத் திருடாத செயலிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எல்லா செயலிகளையும் சோதித்துப் பார்த்து அதன் பாதுகாப்பை உறுதி செய்தே அனுமதிக்கும். ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் பாதுகாப்பை நாடுபவர்கள் பிளாக்போனை விரும்பினாலும் அதில் செயலிகளை அணுக முடியாதது பெரும் சிக்கலாக இருந்தது, இப்போது பிளாக்போனே பிரத்யேக ஆப் ஸ்டோரை அறிவித்துள்ளது.
மேலும் அலுவலக மற்றும் வீட்டு உபயோகத்துக்காக போனைப் பிரித்துக் கொள்ளக்கூடிய ஸ்பேசஸ் எனும் சாப்ட்வேர் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.
பிளாக்போன் பற்றி அறிய:>https://www.blackphone.ch/
