ஸ்மார்ட் போன் புதிது !

ஸ்மார்ட் போன் புதிது !
Updated on
1 min read

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ZTE தனது புதிய ஸ்மார்ட் போன் கிராண்ட் எஸ் II (Grand S II) -ஐ இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மின்வணிக தளமான அமேசான்.இன் மூலம் இதனை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 5.5 இன்ச் எச்டி ஸ்கிரீன் கொண்டது. குவால்காம் ஸ்னேப்டிராகன் குவாட் கோர் 800 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டது. 16 ஜிபி ஸ்டோரேஜ். 32 ஜிபியாக நீட்டித்துக்கொள்ளலாம். 13 பிக்சல் மற்றும் 5 பிக்சல் முன்பக்க கேமிரா கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. 2500 mAh பேட்டரி கொண்டது. விலை ரூ.13,999, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in