

ஆண்டின் சிறந்த செயலிகள் பட்டியலை, ஆண்ட்ராய்டு பயனாளிகள் அடிப்படையில் கூகுள் கடந்த வாரம் வெளியிட்டது. இப்போது ஆப்பிள் நிறுவனம் ஆண்டின் சிறந்த ஐபோன் செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மூளைக்கு வேலை கொடுக்கும் செயலியான எலிவேட் முதலிடத்தில் இருக்கிறது. த்ரீஸ் (Threes! ) எனும் கேமும் முன்னிலையில் உள்ளது. இன்ஸ்டாகிராமின் ஹைபர்லேப்ஸ் மற்றும் லியோஸ் பார்டியூன் ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. யாஹூ நியூஸ் டைஜஸ், ஸ்விட்கீ, 1 பாஸ்வேர்டு, காமிரா+, பஸ்ஃபீட் உள்ளிட்டவையும் இந்தப் பட்டியலில் உள்ளன.
இவை ஆப்பிள் குழுவால் தேர்வு செய்யப்பட்டவை. சிறந்த ஐபேட் செயலியாக பிக்சல்மீட்டர் தேர்வாகியுள்ளது. பயனாளிகள் டவுன்லோடு செய்தவை அடிப்படையிலான பட்டியலும் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேஸ்புக் மெசஞ்சர், ஸ்னேப்சாட், யூடியூப் ஆகியவை இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் இடம்பெற்றுள்ளன. பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் பண்டோரா அடுத்த இடங்களில் உள்ளன.